Monday, April 8, 2013

நமீதாவை சுத்தி பார்க்கபோறோம்...!!!



 “மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு”, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”    

  அன்றுதான் தமிழ் கீச்சர்களின் மெஹா ட்விட்-அப் நடந்தது. ட்விட்-அப் நடக்கும்போது தண்ணி பாக்கெட், மைக் செட் செக் பண்றது, அவுங்க உக்கார்றதுக்கு சேர் துடைச்சு போடுறது இந்த மாதிரி வேலை பண்றதுக்காக சனியனையும் (@SelvaaRocky) கூப்பிட்டாங்க. அப்போதுதான் முதன் முதலில் சனியன் பிரபல கீச்சர்  திருக்குமரனை (@ThirutuKumaran) சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. குமரன் சனியனிடம் போய் தண்ணி இருக்கான்னு கேட்டான் சனியன் இருக்குன்னு சொல்லி தண்ணியை குடுத்தான், அதுக்கு குமரன்; யோவ் அடிக்கிறதுக்கு தண்ணி கேட்டா குடிக்கிறதுக்கு குடுக்கிற, இதுக்குத்தான் நான் இந்தியாவுக்கே வர்றதில்ல, இதுவே “மஸ்கட்டா” இருந்தா  இந்நேரம் ஃபுள் குடுத்து குளிக்கவே வச்சிருப்பாங்க, சத்தம் கேட்டு அடுத்த பிரபல கீச்சர் கில்லி (@iGhilli) வந்து என்னாச்சு மச்சின்னு கேட்டான்; (வேற யாரும் கண்டுக்கவே இல்லை ஏன்னா எல்லாரும் கடலை வறுத்திங், கில்லி உத்தமன் அவனுக்கு இதெல்லாம் புடிக்காது) சனியன் அழுதிட்டு நடந்ததை சொன்னான். உடனே கில்லி பாக்கட்டில் இருந்த குவாட்டர் பாட்டில எடுத்து குமரனை காணாமல் சனியன் பாக்கட்டில் போட்டிட்டு குடுக்க சொன்னான் (கில்லி உத்தமனாமாம்), சனியனும் கொண்டு போய் குடுத்தான். அப்பத்தான் குமரனின் முகம் சற்று பிரகாசம் ஆனது.

     குவாட்டர் அடிக்கிற வரைக்கும் “எமதர்மனா” இருந்த குமரன் இப்போ “போதை தர்மன்” ஆயிட்டான்,  போதையில அவனுடைய காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிச்சான், அதை கேட்டிட்டு இருக்கும்போதே கில்லி மானஸ்தன் தூங்கிட்டான். சனியன் தனியா மாட்டிட்டான். ஒரு பக்கம் பிரபலங்கள் ட்விட் அப் நடக்க இன்னொரு பக்கம் குமாரனோட கிக்அப் நடந்திட்டு இருந்திச்சு. யாராவது பாக்கிறதுக்கு முன்னாடி இங்க இருந்து சீக்கிரம் கிளம்பி ஆகணும்னு சனியன், எல்லர்க்கிட்டையும் அவசரமா கிளம்பணும்னு சொல்லிட்டு கிளம்ப இன்னொரு பிரபல கீச்சர் (பேர் சொல்ல விரும்பாதவர்) ஒரு ரூ.1000/- எடுத்து நீட்டினார் இந்தா நிறைய வேலை பாத்து கஷ்டப்பட்ட வச்சுக்கோ; சுத்தி சுத்தி பார்த்தான் யாரும் கவனிக்கல வாங்கி பாக்கட்டில் போட்டான். அப்பிடியே ஒரு வழியா ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு ரெண்டு போரையும் குளிப்பாட்டி படுக்க வச்சான்.

     அடுத்தநாள் போதை தர்மர்கள் படுக்கைய விட்டு எழுந்து சனியன்கிட்ட கேட்ட முதல் கேள்வி; மச்சி இங்க பக்கத்தில சரக்கு எங்க கிடைக்கும்? அதுக்கு கில்லி யோவ் குமரா முதல்ல பல்லு தேச்சு குளிச்சு ரெடி ஆகுயா நானும் வர்றேன் சேர்ந்தே போவோம். அதுக்கு குமரன்; இதுதான்யா இங்க நம்ம பயலுங்க பிரச்சனையே மஸ்கட்டில நாங்க எல்லாம் பல்லே தேய்க்கிறது கிடையாது வெறும் Mouth Freshner—தான் சும்மா வாயில போட்டா போதும் இங்க மட்டும்தான் காலையில எந்திரிக்கணுமாம் பல்லு தேய்க்கணுமாம், குளிக்கணுமாம் ஒரே குஷ்டமப்பா... சனியன் இதெல்லாம் கேட்டுக்கிட்டு கோவப்படுறதா, சிரிக்கிறதா ஒண்ணுமே தெரியாம வெறப்பா நின்னுட்டு இருந்தான்.

     மூணு பேரும் ரெடியாயி பக்கத்தில இருக்கிற சரக்கு கடைக்கு போனாங்க. நாக்கு தள்ளுற வரைக்கும் குடிச்சிட்டு குமரன் அவனுடைய மஸ்கட்டில் பிஸ்கட் விற்கும் கதைய ஆரம்பிச்சான்; கில்லி ரோஷக்காரன் திருட்டுகுமரனை பேச விடாம தொடர்ந்தான்; மச்சி நீ விடுமுறைக்கு மஸ்கட்டில் இருந்து வந்திருக்க, இந்த விடுமுறைய நீ வாழ்நாள் முழுவதும் மறக்ககூடாது எங்கையாவது போவோமா சொல்லு நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னான். உடனே சனியன் சொன்னான் மச்சி நாம மூணு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போவோம்,

கில்லி: ஆமாம் மச்சி கோவிலுக்கு போவோம் அங்க சூப்பர் ஃபிகருங்கல்லாம் வரும் என்ன  சொல்ற? (ம்க்ம்ம்ம் சனியன் எதுக்கு கூப்பிட்டான் இவன் எதுக்கு கூப்பிர்றான் பாருங்க)
குமரன்: யோவ் நீங்களே முடிவு பண்ணிட்டா அப்புறம் எதுக்குயா எங்கிட்ட கேட்டீங்க நீங்க   ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வாங்க நான் வரலை.
கில்லி: சரி அப்போ நீயே சொல்லு.!
குமரன்: மாம்ஸ் ரொம்ப நாளா எனக்கு”நமீதா”வை சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்குயா என்னை கூட்டிட்டு போறீயா??
சனியன்: யோவ் மாம்ஸ் மஸ்கட்டுக்கு திரும்பி போக ஆசையா இல்லையா, “நமீதாவை” சுத்தி பாக்கணும்னா கொறஞ்சது மூணு, நாலு நாளாவது ஆகுமே...!!
கில்லி: அதுவும் சரிதான் மச்சி கொறஞ்சது அவன் சொல்றமாதிரி மூணு நாலு நாளாவது  ஆகும் பரவாயில்லையா..?
திருக்குமரன்: அதெல்லாம் எனக்கு தெரியாது ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டிட்டு போறீங்க இல்லாட்டி நான் ஊருக்கு கெளம்புறேன்.
கில்லி: கோச்சுக்காத மச்சி உனக்கு பிரச்சனை இல்லைன்னா எங்களுக்கு என்ன பிரச்சனை நாங்க வெட்டியாத்தான் இருக்கோம்.
(பேசிட்டு இருக்கும்போது போதையில் திருட்டுகுமரன் டேபிள்ல சாஞ்சிட்டான்)
கில்லி: யோவ் சனியனே கிளம்புறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு. குறிப்பா ஒரு மூணு, நாலு நாளுக்கு தேவையான பழங்கள், ஜூஸ், பிஸ்கட் எல்லாம் ரெடி பண்ணிக்கோ இந்தா இதுல ஒரு ரூ.15000/- இருக்கு குமரன் பாக்கட்டில இருந்து சுட்டது வச்சுக்கோ. (அடப்பாவி இது வேறையா)
(அப்பிடியே குமரனை தூக்கி டாக்ஸி புடிச்சு ரூமுக்கு கிளம்பிட்டாங்க)

சனியன்: யோவ் இதுல இருக்கிற காசுக்கு “நமீதா”வோட வீட்டு வாசல் வரைக்கும் தான் போக முடியும். “நமீதா” இருக்கிறது வீட்டுக்குள்ள பல செக்கிரியூட்டி தாண்டனும், பல வேலைக்காரிங்கள தாண்டனும் இதுக்கெல்லாம் காசு வேணும்யா.
கில்லி: ஓகேடா மச்சி, நான் குமரன் கிட்ட சொல்லி அரேஞ் பண்ணி தர்றேன். அவன்கிட்ட மஸ்கட்ல பிஸ்கட் வித்த காசு நிறைய இருக்கும்.
சனியன்: இல்ல மச்சி குமரன்கிட்ட கேட்டா தரமாட்டான் அங்க பாரு குமரன் போதையில தூங்கிட்டு இருக்கான் அவன் பாக்கட்டில் இருக்கிற மிச்சத்தையும் சுட்டிரு அதுவே போதும்.
கில்லி: யோவ் என்னைய போய் திருட சொல்லுற நான் எப்பிடி....
சனியன்: டேய் இப்போ கொஞ்ச முன்னாடி குமரன் பாக்கட்டில சுட்டியே அதே மாதிரி நைசா அடிச்சிரு..

(கில்லியும் பாக்கட்டில் இருந்த மிச்சத்தையும் சுட்டு சனியன் கிட்ட குடுத்திட்டான்)
    
அடுத்த நாள் காலையிலேயே மூணு பேரும் சேர்ந்து கிளம்ப தயாராயிட்டங்க ஆனா குமரன் எதையோ தேடிட்டு இருந்தான்.

கில்லி: என்னாச்சு மச்சி என்ன தேடிட்டு இருக்க?
குமரன்: இல்லையா பாக்கட்டில ஒரு ரூ 75000/ போல வச்சிருந்தேன் அதை காணோம் அதான் தேடிட்டு இருக்கேன்.
சனியன்: பாக்கட்டில அவ்வளவு காசு ஏன்யா வச்சிருந்த?
குமரன்: நேத்தைக்கு நாம மூணு பேரும் சேர்ந்து நமீதாவ சுத்தி பாக்க போகலாம்னு முடி பண்ணினோம்ல நீங்க ரெண்டு பேரும் வேற வெட்டியா இருக்கீங்க கையில காசு இருக்காது அதுக்குத்தான் காசு ரெடி பண்ணி வச்சிருந்தேன் அதை காணோம்.
(கில்லி சனியனை பார்த்து மொறச்சான்)

கில்லி: யோவ் மாம்ஸ் நீ காசு நேத்தைக்கே எங்கிட்ட குடுத்திட்டையா நான் சனியன் கிட்ட குடுத்திட்டேன் வேணும்னா சனியன் கிட்ட கேட்டு பாரு. (கில்லி எப்பிடியோ சமாளிச்சான்)
சனியன்: ஆமா மச்சி நீ நேத்தைக்கே கில்லி கிட்ட குடுத்திட்ட மறந்திட்டியா...
குமரன்: ஓ அப்பிடியா.!! அது ஒண்ணும் இல்ல எப்பவுமே ஃபாரின் சரக்கே அடிக்கிற எனக்கு இந்த லோக்கல் சரக்கு ஒத்துக்கல அதான் மறந்திட்டேன். யோவ் சனியனே காசு பத்தலன்னா எங்கிட்ட கேளு என்ன...
சனியன்: ஓகே மச்சி, (ரொம்ப நல்லவனா இருக்கானே இது தெரியாமா காசை ஆட்டைய போட ஐடியா குடுத்தோமே) அப்போ கிளம்புவோமா...!!

மூணு பேரும் நமீதா வீட்டு முன்னாடி வந்திட்டாங்க, சுமார் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் அளவு மதில் சுவர் போடப்பட்டிருந்தது. கேட்டில் இரண்டு செக்கிரியூட்டி வேற, எப்பிடியும் உள்ள விடமாட்டானுங்க எப்பிடி கேட்டை கடந்து உள்ள போறதுன்னு மூணு பெரும் தீவிர யோசனையில்....


கற்பனையில் வாழும் உத்தமர்கள் @iGhilli, @SelvaaRocky, @ThirutuKumaran



Photo by @krajesh4u 


குமரன்: மச்சி மதில் சுவரே இம்புட்டு பெருசா இருக்கே அப்போ வீடு எம்புட்டு பெருசா இருக்கும்ம்ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்
கில்லி: யோவ் குமரா உள்ள போறதுக்கு ஏதாவது ஐடியா குடுக்குறத விட்டுட்டு சும்மா காமடி பண்ணிட்டு இருக்க...??
சனியன்: அவனுக்கு என்ன மச்சி ஈசியா “நமீதாவை” சுத்தி பாக்கணும்னு சொல்லிட்டான், அப்பிடி இப்பிடி எதாவது ஆச்சுன்னா இவன் மஸ்கட்டில ஓடிருவான். நாமதான் மாட்டிக்கிட்டு முழிக்க போறோம்.
குமரன்: யோவ் ரெண்டு பேரும் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு... இப்போ கூட்டிட்டு போறீங்களா இல்ல நான் ஊருக்கு கிளம்புறேன்..
கில்லி: இருயா கூட்டிட்டி போறோம், ஆஊன்னா பெரிய ரோஷக்காரன் மாதிரி உடனே கோவப்படுறது.
சனியன்: சரி அப்போ நான் போய் வாட்ச்மேன காசு குடுத்து கரெக்ட் பண்ணிட்டு வாறேன், ரெண்டு பேரும் ஓரமா போய் நில்லுங்க போங்க போங்க.
ஒரு வழியா வாட்ச்மேனுக்கு காசு குடுத்து உள்ள போறதுக்கு அனுமதி வாங்கிட்டு வந்தான் சனியன். மூணு பெரும் சேர்ந்து உள்ள போனா அங்க தோட்டக்காரி, அவளுக்கும் காசு குடுத்து சமாளிச்சு மூணு பேரும் சேர்ந்து உள்ள போயிட்டாங்க.
குமரன்: மச்சி வீடு ஏன்யா இம்புட்டு பெருசா இருக்கு?
கில்லி: உள்ள யானை குட்டி, பண்ணி குட்டி எல்லாம் இருக்குல்ல அதுங்க எல்லாம் நல்லா மேயனும்னுதான் பெருசா கட்டி விட்டிருக்காங்க.
உள்ள நமீதாவோட மேனேஜர் நின்னுட்டு இருந்தான், மூணு பெரும் வர்றதை பாத்து; என்ன வேணும் கேட்டான்.

குமரன்: நமீதா மேடத்த சுத்தி பாக்கலாம்னு வந்தேங்கோ..
மேனேஜர்: என்னது சுத்தி பாக்க வந்தீங்களா
சனியன்: இல்ல சார் வாய் தவறி சொல்லிட்டான், நமீதா மேடத்த பார்த்திட்டு அப்பிடியே வீட்ட சுத்தி பாக்கலாம்னு வந்தோம்.
மேனேஜர்: அதுக்கு நிறைய ஃ”பார்”மாலிட்டீஸ் இருக்கு தெரியும்ல
குமரன்: தெரியும் சார் அதுக்குத்தான் ஃபாரின் சரக்கு கொண்டு வந்திருக்கோம்.
மேனேஜர்: ஓகே ஓகே இங்க உக்காருங்க மேடம் இப்போ வருவாங்க
கில்லி: சரிங்க
குமரன்: கேணப்பயன் பாரின் பாட்டில்ல யூரின் ஊத்தி குடுத்தாலும் நம்பிருவானுங்க போல
சனியன்: யோவ் என்னய்யா சொல்லுற.?
குமரன்: ஆமாயா பாரின் பாட்டில்ல நம்ம ஊர் லோக்கல் சரக்குதான் ஊத்தி சீல் பண்ணி வச்சேன் நம்பிட்டான் ங்கொய்யால யாருக்கிட்ட..
கொஞ்ச நேரம் கழிச்சு மேனேஜர் வந்தான்
மேனேஜர்: சாரிங்க மேடம் ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட்டுக்கு போயிருக்காங்க வெளிநாட்டில ஏதோ ஷூட்டிங் இருக்காம்...
குமரன்: பரவாயில்லைங்க நாங்க வெயிட் பண்ணுறோம்
மேனேஜர்: சாரி சார் அவுங்க வர்றதுக்கு மூணு வாரமாவது ஆகும்..
குமரன்: யோவ் அதை பாட்டில் வாங்குறதுக்கு முன்னாடி சொல்லக்கூடாதா
கில்லி: யோவ் குமரா உணர்ச்சி வசப்படாத, சாரி சார் அவன் பாக்க முடியாத கோவத்துல அப்பிடி சொல்லிட்டான்
மேனேஜர்: பரவாயில்லங்க..!!
சனியன்: விடு மச்சி அடுத்த வாட்டி வரும்போது போன் பண்ணி கேட்டுட்டு வருவோம்
குமரன்: போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா, இனிமே வாழ்க்கையில நமீதா படத்த கூட பாக்க மாட்டேன்டா காசு போனதுதான் மிச்சம்.
மூணு பெரும் வருத்தத்துடன் வாட்ச்மேன், வேலைக்காறி எல்லாரையும் மொறச்சு பாத்திட்டு, கடுங்கோபத்துடன் வெளியேறினாங்க

வேலைக்காரன்: என்ன சார் மேடம் உள்ளதான் இருக்காங்க, நீங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க.?!
மேனேஜர்: எவ்ளோ ஃபாரின் சரக்கு (ஓசியில) சாப்பிட்டு இருப்பேன், என்னையே லோக்கல் சரக்கு குடுத்து ஏமாத்த பாத்தாங்க இப்போ பாத்தியா வீட்டுக்குள்ள இருக்குற நமீதா மேடத்தையே இல்லைன்னு சொல்லி ஏமாத்திட்டேன்......

                                                                        வட போச்சே..!!                                                              



ஸ்கூல் படிக்குற காலத்தில் இருந்து சனியனும், திருட்டுகுமரனும் நமீதா விசிறிகள் என்பதை இங்கே சொல்லணும்னு தோணிச்சு 
Photo by @krajesh4u 



Thursday, March 7, 2013

எந்தன் உயிர் தோழியே..!!

     இந்த சனியனுக்கு லெட்டர் எழுதவோ படிக்கவோ தெரியாது, இன்னைக்கு தோழி க்யூட் புஷ்பாவிற்கு (@cutepushpa) பிறந்தநாள். இப்போ தோழிக்கு லெட்டர் எழுதணும்னு ஆசைப்படுறேன். இப்போ நான் புஷ்பாக்கிட்டேயே  சொல்ல, புஷ்பாவே எழுதப்போறாங்க.!

நட்புக்காக நானே காட்டில மேட்டில அலஞ்சு தேடி எடுத்த ரோஜா..!!


(அழாதடா புய்ப்பா கண்ணை தொடச்சுக்கோ)

சனியன்: க்யூட் புஷ்பா தோழமையோடு நண்பன் நான், நான் எழுதும் மொக்க, ச்சி கவிதை லெட்டர், மடல் இல்ல கடிதாசி வச்சுக்கலாமா இல்ல கடிதமே இருக்கட்டும், எங்க படி.?

புஷ்பா: க்யூட் புஷ்பா தோழமையோடு நண்பன் எழுதும் கடிதமே...

சனியன்: ஹஹஹஹா பாட்டா படிக்க சொன்னா, பாடமாவே படிச்சிட்டியா..?  அப்போ நானும்... முதல்ல க்யூட் போட்டல்ல இப்பவும் க்யூட்டே போட்டிரு (ஆசையபாரு) க்யூட்டு உங்க வீட்டில் சவுக்கியமா.? நான் இங்கு சவுக்கியம்.

புஷ்பா: க்யூட்டு உங்க வீட்டில் சவுக்கியமா நான் இங்கு சவுக்கியமே.!

சனியன்: ஆஹோ ஓஹா  உன்னை நினச்சு பாக்கும் போது மொக்கை மனசில அருவி மாதிரி கொட்டுது, ஆனா அதை எழுதணும்னு உக்காந்த அந்த போட்டோ, டிபி...

புஷ்பா: உன்னை எண்ணி பார்க்கையில் மொக்கை மனசில கொட்டுது (பாவி என் கையாலையே என்னை திட்ட வச்சிட்டானே) 

சனியன்: அதான்...

புஷ்பா: அதை எழுத நினைக்கயில் டிபி தடுக்குது...

இந்த டிபி தான் தடுக்குது 


சனியன்: அதேதான் ஆஹா பிரமாதம் கருமம் கருமம் ச்சீ கவிதை கவிதை..!! படி..

சனியன்: ம்ம்ம்ம் எனக்கு உண்டான நட்பு அது தன்னால வளர்த்திடும், அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு பொண்ணுங்ககிட்ட நட்புன்னாலே தானாவே வளர்ந்திடுது (உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது). இதையும் எழுதிக்க, நடுவில நடுவில  மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் (இது வேறையா) இதை பாரு என்னை யாரு கழுவி ஊத்துனாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்கிடுமா.?? புய்ப்பா, புய்ப்பா, புய்ப்பா 

புஷ்பம்: அதையும் எழுதணுமா..??

சனியன்: இது நட்பு... என் நட்பு என்னான்னு சொல்லாம ஏங்க, ஏங்க அழுகையா வருது. ஆனா நான் அழுது என் சோகம் உன்னை சந்தோசப்படுத்திடுமோன்னு நினைக்கும் போது, வர்ற சோகம் கூட நின்னிடுது ஹாஹாஹா....
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல, அதையும் தாண்டி கொடூரமானது......கொடூரமானது.....

புஷ்பா: உண்டான அசிங்கம் எல்லாம் தன்னாலே மாறிப்போன மாயம் என்ன ஏய் சனியா ஏய் சனியா, என்ன அசிங்கம் ஆன போதும் உன் நெஞ்சம் தாங்கி கொள்ளும் எந்தன் நெஞ்சம் தாங்காது தாங்காது..... (ஆமா இதுக்கு மேல எழுதினா தாங்காது)

சனியன்: குடுத்த டைம் முடிஞ்சு போச்சு அப்பிடியே ஓடிரு..!!  



உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற..!!
உன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர..!!
உன் தாய், தந்தை உன்னை பெற்றதற்கு பெருமைப்பட..!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!

நட்பினிலே ஒரு பிரிவொன்று வந்ததே..!!


     பள்ளி பருவத்தில் இருந்தே சூர்யாவும் விக்ரமும் நெருங்கிய தோழர்கள். விக்ரம் சற்று கோபக்காரன் மட்டுமில்லை நண்பர்களுக்கு எங்கு எப்போது பிரச்சினை நடந்தாலும் முன்னால் நிற்பவனும் கூட. இதனால் பல விளைவுகளை சந்தித்தவன் மட்டுமில்லை, ஊரிலும் விக்ரமை யாருக்கும் பிடிக்காது. சுருக்கமா விக்ரமை ஒரு பொறுக்கி என்றே சொல்வார்கள். பழகிய 25 வருடத்தில் இதுவரை சூர்யாவுக்கும் விக்ரமும் இருவருக்கும் இடையில் இதுவரை பிரிவென்பதே வந்ததில்லை, வரவிட்டதுமில்லை.



    சூர்யா விக்ரமுடன் நெருக்கமாக பழகுவது சூர்யாவின் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை (எல்லா பெற்றோர்களும் நினைக்கும் காரணம்தான் தன் பிள்ளையும் எங்கே விக்ரமை போல மாறிவிடுவானோ என்ற பயம்) ஆனால் சூர்யா விக்ரமை தவிர யாருடனும் நெருக்கமாக பழகியதில்லை, இது சுத்தமாக பிடிக்காத சூர்யாவின் வீட்டார்கள் விக்ரமை பல முறை எச்சரித்தார்கள், இது அறிந்து சூர்யாவுக்கும் வீட்டாருக்கும் பல முறை சண்டைகள் நடந்தது. விக்ரமுடன் மட்டும் பழகக்கூடாது என்பது சூர்யாவின் வீட்டினரின் வாதம், விக்ரமை தவிர யாருடனும் பழகமாட்டேன் என்பது சூர்யாவின் வாதம். எப்பிடியாவது சூர்யாவையும் விக்ரமையும் பிரிக்க பல வழிகளில் யோசித்து கடைசியாக வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் சூர்யாவின் அத்தானை தொடர்பு கொண்டு சூர்யாவுக்கு அங்கே ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

     விசாவும் வந்தது சூர்யாவும் போக முடிவு செய்து, கிளம்பும் முந்தய நாள் இரவில் சின்னதாக விருந்து ஏற்பாடு செய்து சூர்யாவும் விக்ரமும் நண்பர்களுடன் சந்தித்து அப்புறமாக பிரிந்து சென்றனர். அடுத்தநாள் வரை விக்ரமுடன் இருந்துவிட்டு காலை வீட்டில் சென்று கிளம்ப தயாராகினான். வீட்டில் எல்லாரும் சேர்ந்து ஏர்போர்ட் வரை சூர்யாவுடன் சென்று வழிஅனுப்பிவைத்து நிம்மதி பேரு மூச்சு விட்டனர். மூன்று மாதம் கழித்து விக்ரமுக்கும் வெளிநாட்டில் வேலை கிடைத்து விக்ரமும் வெளிநாடு சென்று விட்டான். இருவரும் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் அடிக்கடி அலைபேசியில் உரையாடி நலம் விசாரித்துக்கொண்டேதான் இருந்தார்கள்.

    இரண்டு வருடம் கழித்து சூர்யாவுக்கு விடுமுறை செல்ல வாய்ப்பு கிடைத்தது. விக்ரமுக்கு விசா முடிய இன்னும் மூன்று மாதம் இருப்பதால் இப்போதைக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சூர்யா விடுமுறைக்காக ஊரில் வந்து இரண்டு மாதம் கழித்து திரும்பவும் வெளிநாட்டில் சென்று விட்டான். அதற்கு பின் மூன்று மாதம் கழித்தே விக்ரம் ஊருக்கு வந்தான். இரண்டு பேருக்கும் ஒருவரையொருவர் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அடிக்கடி இணையத்தில் முகம் பார்த்து பேசிக்கொண்டார்கள்.

     சரியாக ஒரு வருடம் கழித்து விக்ரமுக்கும் விக்ரமின் மேனேஜருக்கும் இடையில் சின்ன தகராறு ஏற்பட்டு விசா முடியும் முன் கேன்சல் செய்துவிட்டு விக்ரம் ஊருக்கு திரும்ப வந்திட்டான். ஊரில் வந்து கொஞ்சநாள் கழிந்த உடன் விக்ரம் சென்னைக்கு வேலை தேடி சென்று விட்டான். இரண்டு வருடம் கழித்து சூர்யாவும் வேலை பிடிக்காமல் விசா முடிந்தவுடன் விசாவை கேன்சல் செய்துவிட்டு ஊரில் வந்தான், ஆனால் இது சூர்யா வீட்டிற்கு தெரியாது. விக்ரமும் சென்னையில் இருந்து விடுமுறை எடுத்து ஊரில் வந்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். நான்கு வருடம் கழித்து இரண்டு பெரும் நேரில் சந்தித்துக் கொண்டனர் இருவருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் தான் விளக்க வேண்டுமா..!

    ரெண்டு பேரும் சேர்ந்து வெளிநாட்டிற்கே வேலைக்கு போக முடிவு செய்து, அவர்களுக்கு தெரிந்த அறிந்த பல பேர்களுடன் தொடர்பில் இருந்தனர். ஒரு வழியாக விக்ரமிற்கு வேலை ரெடி ஆகிவிட்டது. விசாவிற்கு இரண்டு லெட்சம் ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் விக்ரமின் வீட்டில் காசு இல்லை, சூர்யாவின் வீட்டில் கேட்டால் கிடைக்கும் ஆனால் விசா கேன்சல் செய்து வந்த விஷயம் சூர்யாவின் அத்தான் மூலமாக தெரிய வந்ததால் சூர்யா கேட்டால் உதைதான் கிடைக்கும் காசு கிடைக்காது அது இருவருக்கும் தெரியும் இருந்தாலும் சூர்யா வீட்டில் காசு கேட்டு கிடைக்காததால் வீட்டில் சண்டை நடந்து வீட்டில் போவதையும் நிறுத்திவிட்டான்.

     காசுக்கு இரண்டு பேரும் பலரிடம் கேட்டும் ஒரு பலனுமில்லை. அப்போது விக்ரம் ஒரு ஐடியா சொன்னான். அதற்கு சூர்யாவும் சம்மதித்தான். அந்த ஐடியா வேறொன்றுமில்லை கோயிலில் இருந்து உண்டியலை திருடத்தான். அதற்கு முன் வெளிநாட்டில் செல்வதற்கு எல்லா முன் ஏற்பாடும் செய்தனர்.



     எல்லா ஏற்பாடும் நடந்த பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து இரவு கோயிலில் திட்டம் போட்டதுபோல் திருடிவிட்டு வந்தனர். அடுத்தநாளே எல்லா காசையும் குடுத்து டிக்கட் புக் பண்ணி அந்த இரவே விக்ரம் வெளிநாடு பறந்தான். ஒரு வாரம் கழித்து போலீஸ் சூர்யாவை தேடி வந்து விசாரித்தனர் யாரோ பார்த்ததாக புகார். கொஞ்ச நாள் கழித்து விசாரணையில் சூர்யாவை கைது செய்தனர், விக்ரமையும் தேடினர் அதற்கு சூர்யா தான் தனியாக செய்ததாக ஒப்புக்கொண்டான்.

     சூர்யாவிற்கு நான்கு ஆண்டு தண்டனை முடிந்து வெளியில் வந்தான். சூர்யா வீட்டில் இருந்து சூர்யாவின் மாமாவும், அப்பாவும் வந்து சூர்யாவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். யாரும் பேசாமலே “விக்ரமுடன் நடக்க வேண்டாம் என்று சொன்னோமே கேட்டியா” என்கிற மாதிரி பார்த்தனர். ஆனால் சூர்யா அதை சட்டை செய்யாமல் வெளியே சென்று நண்பர்களுத் விக்ரமை குறித்து விசாரித்தான். அதற்கு; விக்ரம் ரெண்டு ஆண்டுக்கு முன்னாடியே விடுமுறைக்கு வந்து சென்று விட்டதாகவும், புதிய வீடு வாங்கியதாகவும் அடுத்த மாதம் விடுமுறைக்கு வரும்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

     சூர்யாவின் மனதில் ஒரே குழப்பம்; விடுமுறைக்கு வந்த விக்ரம் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை, ஒரு தகவலும் இல்லை.? சரி அடுத்த மாதம் விடுமுறைக்கு வருவானே பேசிக்கலாம், கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும் என்று அந்த நாளுக்காக காத்திருந்தான்.

   ஒரு மாதம் கழித்து விக்ரம் வந்ததை அறிந்து விக்ரம் வீட்டிற்கு சென்று விசாரித்தான், அதற்கு விக்ரமின் அம்மா; தம்பி அடுத்த வாரம் விக்ரமுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் இந்த நேரம் நீ இங்க வர்றது.... இனிமே அவனை பார்க்கவோ பேசவோ முயற்சி பண்ணாத அது நல்லதில்லை. இதை கேட்டு சூர்யா வருத்தப்பட்டாலும் மனசை தேத்திக்கிட்டு விக்ரமை பார்க்க வெளியே காத்திருந்தான். அரைமணி நேரம் கழித்து விக்ரம் காரில் வருவதை கவனித்தான், விக்ரமும் சூர்யா நிற்பதை கவனித்தான் உடனே வண்டியை நிறுத்தி கீழே இறங்கினான்.

     சூர்யா; “நல்லா இருக்கியா நண்பா..??”

     விக்ரம்; நல்லா இருக்கேன்...

     சூர்யா; அடுத்த வாரம் கல்யாணமாமே சொல்லவே இல்லை, உங்க வீட்டில வந்தேன் உங்க அம்மா திட்டினாங்க, வீட்டில வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதான் வெளிய காத்திருந்தேன்..

     விக்ரம்; எங்கிட்டயும் அப்பிடித்தான் சொன்னாங்க உன் கூட பேசக்கூடாது, பழகக்கூடாதுன்னு....

    நானும் யோசிச்சேன் அடுத்த வாரம் கல்யாணம் முடிஞ்சு அப்பிடியே வெளிநாட்டில குடும்பத்தோடு செட்டில் ஆயிருவேன் இனிமே பேச பழக முடியாது, அப்பிடி பாக்கும் பொது அவுங்க சொல்றது சரிதானே..
உன்னோட அக்கவுண்டில் இப்பத்தான் ஒரு அஞ்சு லட்சம் காசு போட்டேன் அதை வச்சு நீயும் ஏதாவது பண்ணிக்கோ...
தப்பா நினைச்சுக்காத...
இனிமே நாம் சந்திக்க வேண்டாம்.

     சூர்யா; லேசான புன்னகையோடு; ரெண்டு வருஷம் முன்னாடி விடுமுறைக்கு ஊர்ல வந்திருக்க என்னை வந்து பாக்கல,

யார்க்கிட்டையாவது விசாரிச்சிருப்பன்னு பார்த்தா அதும் இல்ல,

அடுத்த வாரம் கல்யாணம் அதுக்கும் என்னை கூப்பிடல்ல,

எல்லாத்துக்கும் மேலா நட்பை காசு குடுத்து நம்ம நட்போடு மதிப்பு அஞ்சு லட்சம் தான்னு சொல்லாம சொல்லிட்ட...

இப்பவும் வீட்டில இருக்கிற எல்லாரும் சொல்லியும் கேக்காம உன்னை பார்க்க வந்தேன்,
என் நண்பன் வருவான்ன்னு காத்திட்டு இருந்தேன்,
இதெல்லாம் நான் உனக்காக ஜெயிலுக்கு போனேங்கிற காரணம் மட்டும் இல்ல அதையும் தாண்டி நட்புன்னு ஒண்ணு இருக்குன்னு நம்பிட்டு இருந்தேன், அதெல்லாம் பொய் ஆக்கிட்ட..!
அதையும் தாண்டி காசுன்னு ஒண்ணு இருக்குன்னு புரிய வச்சிட்ட ரொம்ப நன்றி நண்பா......
     
வலியுடன் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு போனான்....

இப்போதுதான் சூர்யாவின் பார்வையில் உலகம் விடிந்திருந்தது .......!!